விஜய் நம்பீசன் – சேர்ந்திருக்கக் கூடாதவை

செய்திகள் சொல்லாதவை – 5 

விஜய் நம்பீசன் இந்தக் கவிதையில் வெளிப்படுத்தும் அளவு தன்னிழிவை நான் உணர்ந்ததில்லை. குடிப்பழக்கம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். அதைவிட, அவரளவு தன்னறிவு இல்லாததுதான் அதிக காரணமாக இருக்கும். நம் பிழைகளை உணர்வதற்கும் வருந்துவதற்கும் ஓரளவாவது நம்மைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டுமில்லையா? நான் நல்லவன், தப்பு செய்யாதவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் என்னளவில் நான் என்னைப் பற்றி உயர்வாகவே நினைத்துக் கொண்டிருப்பேன்.

ஆனால் குடிப்பழக்கம் இல்லாதபோதும் விஜய் நம்பீசன் சொல்லும் தேவை இருக்கிறது – “How crudely eager to be loved,” என்று சொல்கிறார். அடுத்து அவர் சொல்வது போல், அடுத்த நாள்  மோசமாக நடந்து கொள்ளலாம்- “how vile next day”, அல்லது வாலைச் சுருட்டிக் கொண்டு வேறு இடம் பார்க்கப் போகலாம். அன்புக்கான விழைவு என்று சொன்னது வழக்கமாக நாம் நினைக்கும் காதல், கணவன் மனைவிச் சண்டை போன்றதல்ல இது. “Desperate with knowledge, opened wide by drink,/ How I’ve thrown my need,” என்றுதான் கவிதை ஆரம்பிக்கிறது. “How tainting the responses,” என்ற ஏமாற்றத்தின் தொடர்ச்சியாகவே, “How crudely eager to be loved.”

எனக்கு நானே இப்போதெல்லாம் சொல்லிக் கொள்வது இது: மரணம் ஒவ்வொருத்தர் வீட்டு வாசலிலும் வந்து நின்று கொண்டிருக்கிறது. யார் அதை அழைத்து வந்தார்கள், எப்படி அழைத்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல, எப்படியும் அது வரத்தான் போகிறது. இன்றில்லை என்றால் நாளை, இவரல்ல என்றால் வேறொருவர். நல்ல நாட்களிலேயே ஜட்ஜ்மெண்டலாக ஆக இருக்காதே, புரிந்து கொள்ள முயற்சி செய் என்று சொல்வோம். இந்தக் கேடு காலத்தில், கனிவாக இரு என்று சொல்வதைத் தவிர வேறெது சரியாக இருக்கும்?  ஆனால் மீண்டும் மீண்டும் தப்பு செய்து கொண்டுதான் இருக்கிறேன், குடிகாரனுக்காவது குடித்தது தப்பு என்ற அறிவு இருக்கிறது, அதற்காக வருத்தப்படும் மனம் இருக்கிறது. நாம் சொல்வது சரி, நாம் செய்வது சரி என்று நினைப்பவர்கள் தவற்றுக்கு வருந்த என்ன காரணம் இருக்க முடியும்?

காலம் கடந்தபின் நம்பீசன் பழசை எல்லாம் நினைத்துப் பார்த்து இப்படி எழுதுகிறார்: “Difficult lies/ And truths despicable in their fragility,/ Both lack the charm of inadequacy.” கடினமான பொய்கள், சீக்கிரம் வெளுத்துவிடும் என்று சொல்லக்கூடிய அளவு கேவலமான உண்மைகள்- இரண்டுக்கும் போதாமையின் வசீகர அழகில்லை.  கஷ்டப்பட்டு பொய் சொல்கிறோமோ இல்லை இட்டுக்கட்டி அப்போதைக்கு ஒரு உண்மையை உருவாக்குகிறோமோ, எதுவானாலும் சரி, சிந்திக்கத் தெரிந்தவனுக்கு,- கவிதையில் ஆரம்பத்தில் வருகிற “Desperate with knowledge,” ஆசாமிக்கு – இதெல்லாம் எவ்வளவு சுலபமாக இருக்கின்றன. ஏதோ ஒரு பொய் சொன்னோம் அல்லது உண்மையில் பாதி சொன்னோம், அப்போதைக்கு அது போதுமானதாக இருந்தது என்றால்கூட பரவாயில்லை. பேசுவது ஒன்று செய்வது ஒன்று, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடுகள்- எல்லாவற்றையும் அப்புறம் நியாயப்படுத்துவது ரொம்ப சுலபமாக இருக்கிறது என்றால் நான் எப்படிப்பட்ட ஆள்?

கயமையும் தன்னறிவும் சேர்ந்தே இருக்கக் கூடாதவை. அப்படிச் சேர்ந்தால், இவ்வளவு சுய இழிவை ஒரு மனம் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்.

கவிதை உதவி- நம்பி கிருஷ்ணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.