மிக்ஸ்டேப் – 2

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
மரத்தில் மறைந்தது மாமத யானை
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
மரத்தில் மறைந்தது மாமத யானை
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
மரத்தில் மறைந்தது மாமத யானை
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
மரத்தில் மறைந்தது மாமத யானை

Advertisements

மிக்ஸ்டேப்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
மரத்தை மறைத்தது மாமத யானை
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
மரத்தில் மறைந்தது மாமத யானை
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

ஓவியமும் கணிதமும் – ஒரு வினோத ரசாயனம்

இலக்கியத்தையும் ஆன்மிகத்தையும் போலவே எனக்கு அறிவியலிலும் கணிதத்திலும் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் உண்டு – இவற்றில் எதிலுமே நான் என்றுமே வெற்றி கண்டதில்லை என்றபோதிலும்கூட.

கணிதத்தை எடுத்துக்கொண்டால், இயற்கை நிகழ்வுகள் அனைத்தையும் சமன்பாடுகளைக் கொண்டு எவ்வளவு துல்லியமாக விவரிக்க முடிகிறது என்ற வியப்பு ஒரு பக்கம் இருந்தால், அந்த சமன்பாடுகளின் பொருள் என்ன என்ற பிரமிப்பு மறுபுறம் என் சிந்தனையை ஆக்கிரமிக்கிறது. LaTeX போன்ற சமன்பாடு எழுதுவான்களைக் கொண்டு வகைவகையான சமன்பாடுகளை எழுதி பிகாஸோவின் ஓவியங்களுக்குரிய அழகும் மர்மமும் அவற்றில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டது உண்டு.

மண்குதிரை என்ற நண்பர் அறிமுகப்படுத்திய வரைவானில் ஓவியங்களைப் படைப்பதற்கு இணையான இன்பம் இப்படிப்பட்ட கணித சமன்பாடுகளைப் படைப்பதிலும் இருக்கிறது என்பதை நான் எப்போதும் கண்டு கொண்டேயிருக்கிறேன்.. இந்த இரு கலைகளையும் ஒரு சேரப் பயின்று தேர்ச்சி பெறவும், இவற்றில் உன்னத படைப்புகளை உருவாக்கவும் ஒரு மென்பொருள் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

இன்று காலை ஏதோ ஒரு ப்ரோக்ராம் பைலைத் தேடிக் கொண்டிருக்கும்போது என் கணினியில் Math Input Panel என்று ஒன்று இருப்பதை அறிய நேர்ந்தது. கணிதத்தில்தான் நமக்குத் தீராக் காதலாயிற்றே! இன்புட்டத் துவங்கிவிட்டேன். நம் ஓவியங்கள் சமன்பாடுகளாக உருவம் பெறுவது ஒரு தாய் தன் குழந்தை பேசக் கேட்பதைப் போன்ற ஒரு அனுபவம் – அது சொன்னால் புரியாது, அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

முதல் முயற்சியே மெச்சத்தக்க ஒன்றாக அமைந்தது, இந்த சமன்பாட்டில் உள்ள அழகையும் நேர்த்தியையும் மர்மத்தையும் நாளெல்லாம் வியந்து கொண்டிருக்கலாம் –

இனி இதுபோன்ற கணித ஓவியங்களை ஒரு டம்பளர் ப்ளாகில் தொகுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.